திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர் ஆய்வு


திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 29 March 2020 9:45 PM GMT (Updated: 30 March 2020 2:54 AM GMT)

திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி மார்க்கெட்டை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்தில் காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மார்க்கெட் மற்றும் உழவர் சந்தை ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் 3 அடி தூரம் பொதுமக்கள் இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டு ஒவ்வொருவராக காய்கறி வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை மற்றும் புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டை கலெக்டர் சிவன்அருள் ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருந்த வியாபாரிகள் கடைகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

உடனடியாக அவர்களை நோக்கி வியாபாரம் செய்ய வரலாம், ஆனால் பொதுமக்கள் கூடினால் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் என விளக்கிய கலெக்டர் தயவு செய்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார். இது அங்கிருந்த மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், ஆய்வாளர் விவேக் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story