திருமானூர் அருகே பரிதாபம்: தாய்-சேய் நல வாகனம் மோதி 2 வாலிபர்கள் பலி
திருமானூர் அருகே தாய்-சேய் நல வாக னம் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாப மாக இறந்தனர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிரா மத்தை சேர்ந்தவர் கரிகாலன். இவரது மகன் சூர்யகுமார் (வயது 26). அதே கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்ப வரின் மகன் பத்மநாபன் (27). நண்பர்களான சூர்ய குமாரும், பத்மநாபனும் நேற்று முன்தினம் இரவு திருமானூ ரில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கிக்கொண்டு, வீட்டிற்கு மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டிருந்த னர். தஞ்சை-அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளூர் பாலம் அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் பஞ்சரா னது.
இதனால் சூர்யகுமாரும், பத்மநாபனும் மோட்டார் சைக்கிளை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு டயரை கழற்ற தொடங்கினர். அப்போது எதிரே வேகமாக வந்த தாய்-சேய் நல வாகனம் அவர்கள் மீதும், மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர்கள் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரி ழந்தனர். மேலும் அந்த வாகனம் டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து ஓடி வயல்வெளிக்குள் இறங்கி கவிழ்ந்தது. அதில் இருந்த டிரைவர் இறங்கி தப்பியோடி விட்டார். இதுதொடர்பாக கீழப்பழுவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வரு கின்றனர். தாய்-சேய் நல வாகனம் மோதி 2 பேர் உயிரி ழந்த சம்பவம் வெற்றியூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.
Related Tags :
Next Story