பள்ளி–கல்லூரி, தனியார் நிறுவனங்களில் சம்பள பட்டியல் தயாரிக்க ஊழியர்களுக்கு அனுமதி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


பள்ளி–கல்லூரி, தனியார் நிறுவனங்களில் சம்பள பட்டியல் தயாரிக்க ஊழியர்களுக்கு அனுமதி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 31 March 2020 4:00 AM IST (Updated: 30 March 2020 11:13 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி, தனியார் நிறுவனங்களில் சம்பள பட்டியல் தயாரிக்க ஊழியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டது. 

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மாத இறுதியில் சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பள பட்டியலை தயாரிக்க அந்த நிறுவனங்களில் பணியாற்றும் 2 அல்லது 3 ஊழியர்கள் மட்டும் இன்றும் (செவ்வாய்க்கிழமை). நாளையும் (புதன்கிழமை) சம்பள பட்டியல் தயாரிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆகையால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களை சேர்ந்தவர்கள் அந்தந்த தாசில்தார்களிடம் அனுமதி கடிதம் பெற்றுக் கொள்ளலாம். muthumavattam app என்ற செயலி மூலமும், eoctut@gmail.com என்ற இ–மெயில் மூலமும் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம். மேலும் இந்த பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத வகையில் சமூக இடைவெளி மற்றும் கை கழுவும் நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story