நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பெண் உள்பட 2 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதி
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பெண் உள்பட 2 பேர் கொரோனா அறிகுறியுடன் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் சிகிச்சைக்காக சிறப்பு வார்டும், தனிமை வார்டும் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கொரோனா அறிகுறியுடன் வருபவர்களை சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து நெல்லைக்கு வந்த நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தது. அவர் இங்குள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த 45 வயது ஆண் ஒருவரும், நெல்லை டவுனை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணும் கொரோனா அறிகுறிகளுடன் தனிமை வார்டில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நேற்று வரை இந்த வார்டில் இருந்த 2 பேர் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாததால் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டனர்.
இதையடுத்து நேற்றைய நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரும், பெண் உள்பட 2 பேர் அறிகுறிகளுடன் இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story