மூலனூர் அருகே ஊர் எல்லையில் சோதனைச்சாவடி அமைப்பு; வெளியாட்களுக்கு அனுமதி மறுப்பு


மூலனூர் அருகே ஊர் எல்லையில் சோதனைச்சாவடி அமைப்பு; வெளியாட்களுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 31 March 2020 3:45 AM IST (Updated: 31 March 2020 2:29 AM IST)
t-max-icont-min-icon

மூலனூர் அருகே ஊர் எல்லையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மூலனூர், 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட மணலூர் கிராம மக்கள் வேண்டுகோளுக்கு இணங்க அரசு மற்றும் சுகாதாரத்துறை, காவல்துறை சார்பில் மணலூர் பகுதியின் சுற்றுவட்டார எல்லைகளில் 3 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த சோதனைச் சாவடிகள் அமைத்துள்ள ஊரின் எல்லை பகுதியில் அறிவிப்பு பதாகைகள் வைத்தும், கொரோனா வைரஸ்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியூர்களில் இருந்து வரும் வெளியாட்கள் யாரும் மணலூருக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் இந்த ஊரில் இருந்து யாரும் வெளியே செல்லமாட்டார்கள் எனவும் அந்த பதாகைகளில் எழுதி வைத்துள்ளனர்.

Next Story