கூட்ட நெரிசலை தவிர்க்க குறிப்பிட்ட இடைவெளியில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் - வாரிய அதிகாரிகள் ஏற்பாடு


கூட்ட நெரிசலை தவிர்க்க குறிப்பிட்ட இடைவெளியில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் - வாரிய அதிகாரிகள் ஏற்பாடு
x
தினத்தந்தி 31 March 2020 4:30 AM IST (Updated: 31 March 2020 3:07 AM IST)
t-max-icont-min-icon

கூட்ட நெரிசலை தவிர்க்க குறிப்பிட்ட இடைவெளியில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வாரிய அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சென்னை, 

சென்னை குடிநீர் வாரியம் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா தொற்று குறித்து எந்த பயமும் இல்லாமல் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் முண்டியடித்து லாரிகளில் தண்ணீர் பிடித்துச் செல்வதை பார்க்க முடிந்தது. சமூக பரவலை தடுக்கும் அரசின் முயற்சிக்கு, இது ஒரு தடைக்கல்லாக கருதப்பட்டது. பொதுமக்கள் கூட்டமாக தண்ணீர் பிடிக்கும் வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தன.

இதனைத் தொடர்ந்து குடிநீர் வாரிய அதிகாரிகள் புதுமையான முயற்சியை கையாண்டு வருகிறார்கள். அதாவது குறிப்பிட்ட பகுதிக்கு லாரி வருவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே வாரியத்தின் ஊழியர்கள் அந்தப்பகுதி பொதுமக்களிடம் அறிவுறுத்தி வருகிறார்கள். 

பொதுமக்கள் வரிசையாக இடைவெளிவிட்டு நின்று தண்ணீர் பிடிப்பதற்கு ஏதுவாக சாலைகளில் வட்டங்கள் வரைந்து விடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் இடைவெளிவிட்டு லாரியில் இருந்து குடிநீர் பிடித்துச் செல்கிறார்கள். 

சமூக இடைவெளியை கடைபிடித்து தற்போது வரிசையில் நின்று பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. குடிநீர் வாரியத்தின் இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Next Story