மாவட்ட செய்திகள்

கூடுவாஞ்சேரியில் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் ஆளில்லா குட்டி விமானம் + "||" + In Guduvancheri Monitor public conduct Unmanned petty aircraft

கூடுவாஞ்சேரியில் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் ஆளில்லா குட்டி விமானம்

கூடுவாஞ்சேரியில் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் ஆளில்லா குட்டி விமானம்
கூடுவாஞ்சேரியில் பொதுமக்கள் நடமாட்டத்தை ஆளில்லா குட்டி விமானம் கண்காணிக்கின்றனர்.
வண்டலூர், 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குபவர்கள் தவிர மற்றவர்கள் அநாவசியமாக வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்கள் அதையும் பொருட்படுத்தாமல் தினந்தோறும் சாலைகளில் வாகனங்களிலும், நடந்தும் சென்று வருகின்றனர்.

அவர்களை போலீசார் எச்சரித்தும், பல்வேறு நூதன தண்டனைகளையும் வழங்கி வருகின்றனர். இருந்தபோதிலும் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் சாலையை ஒட்டியுள்ள கடைகள் மற்றும் வீடுகள் உள்ள பகுதிகளில் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆளில்லா குட்டி விமானம் மூலம் பொதுமக்களின் நடமாட்டம் குறித்தும், எந்தெந்த கடைகள் திறந்து இருக்கிறது? என்பது குறித்தும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களையும் போலீசார் ஆளில்லா குட்டி விமானம் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கூடுவாஞ்சேரி அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கைது
கூடுவாஞ்சேரி அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. கூடுவாஞ்சேரி அருகே, வேன் கிளனர் குத்திக்கொலை - பூ வியாபாரி கைது
கூடுவாஞ்சேரி அருகே வேன் கிளனர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பூ வியாபாரி கைது செய்யப்பட்டார்.
3. கூடுவாஞ்சேரியில் மாமியார், மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதி
கூடுவாஞ்சேரியில் மாமியார், மருமகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
4. கூடுவாஞ்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய 3 கடைகளுக்கு ‘சீல்’
கூடுவாஞ்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.