கொரோனா தடுப்பு நடவடிக்கை: தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கை பணி குறித்து அதிகாரிகளுடன் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் நகரில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள், பொறியாளர் நடராஜ், மருத்துவர் கருணாகர பிரபு, சுகாதார ஆய்வாளர் சரோஜா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய தங்கப்பாண்டியன், அனைத்து துறை அதிகாரிகளும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் இதிலிருந்து அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்து வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் ராஜபாளையம் தொகுதி கடந்த 2014-ம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதுபோல் தற்போது நடக்காத வண்ணம் கொரோனா நோயால் இனி ஒருவர்கூட பாதிக்காத வண்ணம் பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தொகுதி மக்களை காப்பாற்ற வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அதற்கு தாம் எப்போதும் உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி கூறினார்.
அதிகாரிகளும் விழிப்புணர்வுடன் செயல்படுவோம் என உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து ராஜபாளையம் நகராட்சி அழகை நகரில் மருந்து தெளிக்கும் பணியை பார்வையிட்டார். அப்போது தி.மு.க. நகர துணை செயலாளர் சரவணன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன், பாரத்ராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story