கள்ளக்குறிச்சியில், கொரோனா சிறப்பு வார்டுக்கு கூடுதல் படுக்கைகள் வருகை
கள்ளக்குறிச்சியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுக்கு கூடுதல் படுக்கைகள் வந்தது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு 100 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவதற்காக வெளியூரில் இருந்து ஒரு வாகனத்தில் மெத்தை மற்றும் கட்டில்கள் கள்ளக்குறிச்சிக்கு வந்தது.
அந்த மெத்தை மற்றும் கட்டில்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இறக்கி வைத்தனர்.
Related Tags :
Next Story