மருத்துவ சிகிச்சைக்கு வெளி மாவட்டத்திற்கு செல்ல அனுமதி பெறவேண்டும் - கலெக்டர் ஷில்பா தகவல்


மருத்துவ சிகிச்சைக்கு வெளி மாவட்டத்திற்கு செல்ல அனுமதி பெறவேண்டும் - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 31 March 2020 10:45 PM GMT (Updated: 31 March 2020 7:09 PM GMT)

மருத்துவ சிகிச்சைக்கு வெளி மாவட்டத்திற்கு செல்ல வேண்டுமானால் அனுமதி சீட்டு பெற்று செல்லவேண்டும் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:–

நெல்லை, 

கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் அவசர மற்றும் அத்தியாவசிய காரணங்களுக்கு பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் அலுவலகம், தொலைபேசி எண் 0462–2501033, நெல்லை உதவி கலெக்டர் அலுவலகம், தொலைபேசி எண் 0462–2501333, சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகம், தொலைபேசி எண் 04634–260124, ஆகிய 3 இடங்களில் அவசர கால கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய பொருட்களை வெளியே கொண்டு செல்லும் தனியார் நிறுவனங்கள், அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள அரசு அல்லாத தனியார் பணியாளர்கள் அனுமதி சீட்டினை கோரிக்கை கடிதத்துடன் தேவையான அடையாள ஆவணங்களை இணைத்து இந்த அலுவலர்களிடம் கொடுத்து அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் இறப்பு, திருமணம் அல்லது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசர காரணங்களுக்கு மாவட்டத்திற்குள் செல்ல வேண்டுமானால் தங்கள் கோரிக்கை மனுவை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடமும், வெளிமாவட்டம், வெளிமாநிலத்திற்கு செல்ல வேண்டுமானால் கலெக்டரிடமும் அணுகி அனுமதி சீட்டு பெற்று தான் செல்லவேண்டும். இந்த சேவையானது, அவசர தேவைகளுக்காக மட்டுமே தவிர சாதாரண தேவைகளுக்கு அல்ல என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த அனுமதி சீட்டு பெறுவதற்கு மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் 9445008157, 8248554110, 9442866999 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, இந்த எண்களில் உள்ள வாட்ஸ்–அப்பிற்கு விண்ணப்பங்களை அனுப்பினால் வாட்ஸ்–அப் மூலமே அனுமதி சீட்டு வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

Next Story