ரூ.1000-க்கு 22 வகை உணவு பொருட்கள் வீடு தேடி வரும் - விருதுநகர் கலெக்டர் தகவல்
ரூ.1000-க்கு 22 வகையான உணவு பொருட்களை வீடு தேடி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் இதுகுறித்து கூறியிருப்பதாவது:-
விருதுநகர்,
தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் வருகிற 14-ந் தேதிவரை டோர் டெலிவரி மூலம் 22 அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய மூடையினை பெற்றுக்கொள்ளலாம்.
பூச்சிக்கொல்லி உபயோகப்படுத்தப்படாத மானாவாரி சாகுபடி விவசாய விளைபொருட்களான மஞ்சள், சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம், மிளகு, துவரம்பருப்பு, உருட்டு உளுந்து, பாசிப்பருப்பு, பாசிப்பயறு, கருப்பு சுண்டல், புளி, பொரிகடலை, சீனி, போர்மொச்சை, கோதுமை மாவு, பெருங்காயத்தூள், வத்தல், ரவை, சமையல் எண்ணெய், உப்பு மற்றும் சக்ராகோல்டு டீ தூள் ஆகிய 22 உணவுப்பொருட்கள் அடங்கிய மொத்தம் 10½ கிலோ எடையுள்ள சிப்பம் 1000 ரூபாய்க்கு வீடுகளுக்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
மாவட்ட மக்கள் அனைவரும் அரசின் ஊரடங்கு உத்தரவினை தவறாது தீவிரமாக கடைபிடித்து தங்களை தற்காத்துக் கொள்ள எங்கும் வெளியில் செல்லாமல் எளிதில் 1000 ரூபாய்க்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை வீட்டிலிருந்தபடியே 97509 43814, 97599 43816, 92454 12800 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
Related Tags :
Next Story