கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 806 பேர் கண்காணிப்பு


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 806 பேர் கண்காணிப்பு
x
தினத்தந்தி 31 March 2020 10:15 PM GMT (Updated: 31 March 2020 10:08 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 806 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காஞ்சீபுரம் ரங்கசாமிகுளம் பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா? என 861 பேர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதில் 55 பேருக்கு 28 நாட்கள் மருத்துவ கண்காணிப்பு முடிந்தது.

அதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். தற்போது 806 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர மருத்துவ குழு கண்காணிப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி தெரிவித்தார்.


Next Story