மும்பையில் காலியாக உள்ள கல்லூரி, குடியிருப்பு கட்டிடங்களில் கொரோனா தனிமை வார்டுகள் - மாநகராட்சி அறிவிப்பு


மும்பையில் காலியாக உள்ள கல்லூரி, குடியிருப்பு கட்டிடங்களில் கொரோனா தனிமை வார்டுகள் - மாநகராட்சி அறிவிப்பு
x
தினத்தந்தி 1 April 2020 5:15 AM IST (Updated: 1 April 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் காலியாக உள்ள கல்லூரிகள், தங்கும் விடுதிகள், குடியிருப்பு கட்டிடங்களில் தனிமை வார்டுகள் அமைக்கப்படும் என மாநகராட்சி அறிவித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் மும்பையில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல ஆயிரக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் மும்பை மாநகராட்சி நேற்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், நகரில் காலியாக உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், சத்திரங்கள், கண்காட்சி மையங்கள், கல்லூரிகள், விடுதிகள், பயணிகள் கப்பல், திருமண மண்டபங்கள் ஆகியவை தனிமை வார்டுகளாக அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த தனிமை வார்டுகளில் தங்க வைக்கப்படும் நபர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய வசதிகள் செய்து கொடுக்கப்படும். இதேபோல போல தனிமை வார்டு அமைக்க மறுக்கும் கட்டிட மற்றும் சம்மந்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘குடிசைப்பகுதிகள், சால் போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மாநகராட்சி கூறிய இடங்களில் அமைக்கப்படும் தனிமை வார்டுகளில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள்’’ என்றார்.


Next Story