பெரம்பலூர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக இதுவரை 220 பேர் மீது வழக்கு


பெரம்பலூர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக இதுவரை 220 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 1 April 2020 10:16 AM IST (Updated: 1 April 2020 10:16 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் தடை உத்தரவை மீறியதாக இதுவரை 220 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி, காரணமில்லாமல் நேற்று முன்தினம் சாலைகளிலும், தெருக்களிலும் சுற்றிக்கொண்டிருந்தவர்கள் மீது, பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் 11 வழக்குகளும், பாடாலூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 8 வழக்குகளும், மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் 10 வழக்குகளும், அரும்பாவூர், குன்னம் போலீஸ் நிலையங்களில் தலா 6 வழக்குகளும், மங்களமேடு போலீஸ் நிலையத்தில் 12 வழக்குகளும், வி.களத்தூர் போலீஸ் நிலையத்தில் 5 வழக்குகளும், கைகளத்தூர் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் என மொத்தம் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக 63 பேர் கைது செய்யப்பட்டனர். 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 23-ந்தேதி முதல் நேற்று வரை 144 தடை உத்தரவை மீறி, காரணமில்லாமல் சாலைகளில் சுற்றிக்கொண்டிருந்த மொத்தம் 220 பேர் மீது 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய காரணமின்றி சாலைகளில் சுற்றியவர்களிடம் இருந்து 73 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story