ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலர்கள் - பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு முக கவசம்


ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய தன்னார்வலர்கள் - பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு முக கவசம்
x
தினத்தந்தி 1 April 2020 10:49 AM IST (Updated: 1 April 2020 10:49 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்கினர். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு முக கவசம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்,

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவகங்கள், திருமண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளன. ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் வடமதுரையை சேர்ந்த தன்னார்வலர்கள் 4 பேர் ஒன்று சேர்ந்து ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வெளிமாநில தொழிலாளர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் எம்.வி.எம். மகளிர் கலைக்கல்லூரி, ரெயில் நிலைய பகுதிகளில் ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு வழங்கினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் தினமும் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என 150 முதல் 200 பேருக்கு உணவு வழங்கி வருகிறோம். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும், உணவு இல்லாமலும் அவதியடைந்து வருகின்றனர். அவர்களுக்கும் தற்போது உணவு வழங்கப்பட்டு வருகின்றோம்.

அதன்படி மாவட்டம் முழுவதும் சுமார் 300 பேருக்கு தினமும் உணவு வழங்கி வருகிறோம். மேலும் அவர்களுக்கு போர்வைகள், மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. டாக்டர்கள் மூலம் அவர்களுக்கு பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் செவிலியர்களுக்கு முக கவசம், நிலவேம்பு கசாயம், கிருமி நாசினி (சானிடைசர்), பிஸ்கெட் பாக்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்களை வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story