செம்பூரில் பிறந்து 3 நாளே ஆன குழந்தைக்கு கொரோனா - தந்தை உருக்கம்
மும்பை செம்பூரில் பிறந்து 3 நாளே ஆன குழந்தைக்கும், தாய்க்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை உருக்கமான வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
மும்பை,
மும்பை செம்பூரை சேர்ந்த 26 வயது பெண் பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் செம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதில் கடந்த 26-ந் தேதி அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் தாயும், குழந்தையும் இருந்த அறையில் கொரோனா பாதித்த ஒருவரும் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பெண் மற்றும் அவரது 3 நாள் குழந்தைக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் தாயுக்கும், குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தாயும், குழந்தையும் மும்பை கஸ்தூர்பா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 நாள் குழந்தையின் தந்தை உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவா் தனது குழந்தை மற்றும் மனைவிக்கு நல்ல சிகிச்சை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை கெஞ்சுகிறார். மேலும் அவர் தனியார் ஆஸ்பத்திரி ஊழியர்களால் தனக்கு நடந்தது, வேறு யாருக்கும் நடக்க கூடாது எனவும் உருக்கமாக கூறியுள்ளார்.
மும்பையில் பிறந்து 3 நாளே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story