ரேஷன்கடையில் நிவாரண பொருட்களை வாங்க பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு


ரேஷன்கடையில் நிவாரண பொருட்களை வாங்க பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 3 April 2020 9:45 PM GMT (Updated: 3 April 2020 7:56 PM GMT)

ரேஷன்கடையில் நிவாரண பொருட்களை வாங்க பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தளவாய்புரம், 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நிவாரணமாக ரூ.1000 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன்கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தளவாய்புரம் பகுதியில் ஒரு சில கடைகளில் ஊழியர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து தினம் 200 பேருக்கு ரூ.1000 கொடுத்து கையெழுத்து வாங்கி ரேஷனில் சீனி மட்டும் இப்போது வாங்கி கொள்ளுங்கள், வருகிற 15-ந் தேதிக்கு பிறகு அரிசி உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்கி கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். மற்ற கடைகளில் இதேபோல் ரூ. 1000 மற்றும் அரிசி வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சேத்தூர் மேட்டுப்பட்டி தேவேந்திர குல வேளாளர் தெருவில் உள்ள ஒரு ரேஷன்கடையில் நேற்று பகல் இந்த நிவாரண பொருட்களை வாங்க பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து சேத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் பட்டுராஜன் உடனடியாக நேரில் வந்து ரேஷன்கடை ஊழியர்களிடமும், பொதுமக்களிடமும் பேசினார். 

பின்னர், 7- வது வார்டுக்கு மட்டும் தற்போது நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் இடைவெளி விட்டு நின்று ரூ.1000 மற்றும் பொருட்களை வாங்கி செல்லுங்கள் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் வரிசையாக நின்று பொருட்களை வாங்கிச்சென்றனர்.

Next Story