சென்னை விமான நிலைய சரக்கக பிரிவில் ஏற்றுமதி, இறக்குமதி தடையின்றி நடக்கிறது - சுங்க இலாகா அதிகாரி தகவல்
சென்னை விமான நிலைய சரக்கக பிரிவில் ஏற்றுமதி, இறக்குமதி தடையின்றி நடைபெறுவதாக சுங்க இலாகா தெரிவித்து உள்ளது.
ஆலந்தூர்,
இது தொடர்பாக சென்னை மண்டல சுங்க இலாகா துறை தலைமை கமிஷனர் வாஸா சேஷகிரி ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்ககம் மற்றும் துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி எந்தவிதமான தடையும் இல்லாமல் 24 மணி நேரமும் இயங்குகிறது. அனைத்து விதமான சரக்கு வாகனங்களும் தடையின்றி செல்வதற்கு தற்போது போலீசார் அனுமதி அளிப்பதால் சரக்கு வாகனங்கள் சாலை போக்குவரத்திலும் தடை ஏற்படாது.
இறக்குமதியான பொருட் களை குறிப்பிட்ட காலத்துக் குள் எடுக்கவில்லை என்றால் இறக்குமதியாளருக்கு காலதாமத கட்டணமாக அபராதம் விதிப்பது வழக்கம். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக பொருட்களை எடுத்து செல்வதில் காலதாமதம் ஏற்பட்டால் அபராதம் கிடையாது.
அபராதம் ரத்து
கடந்த மாதம் 20-ந்தேதிக்கு பின்பு இறக்குமதியான பொருட்களுக்கு காலதாமத அபராதம் ரத்து செய்யப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும்வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். அதேபோல் தனியார் கன்டெய்னர் நிலையங்களிலும் காலதாமத அபராத கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் ஏற்றுமதி, இறக்குமதி பதிவுகள் வழக் கம்போல் செயல்படும். மத்திய அரசின் உத்தரவின்படி சுங்க இலாகாத்துறை இந்த செயல்பாட்டை நடைமுறை செய்து வருகிறது. இறக்குமதியாகும் மருந்து, மருத்துவ உபகரணங் கள், உணவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தங்குதடையின்றி செல்ல வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story