பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம்


பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 4 April 2020 10:32 AM IST (Updated: 4 April 2020 10:32 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.

கரூர்,

கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் கிருமியானது ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு தும்மல், இருமல் உள்ளிட்டவற்றின் போது வெளிப்படும் நீர்திவலைகள் மூலம் பரவு கிறது. அதிவேகமாக பரவும் இந்த வைரசை தடுக்க மத்திய அரசு ஊரடங்கை கடை பிடிக்க உத்தரவிட்டுள்ளது.

அதேநேரத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவினால் தேவையற்ற காரணங்களுக்காக யாரும் வெளியே வரக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியும், வாகனங்கள் உள்ளிட்டவற்றில் வெளியே சுற்றித்திரிந்ததாக 550-க்கும் மேற்பட்டோர் கரூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது பெட்ரோல் விற்பனை நிலையங்களை காலையிலிருந்து மதியம் 2.30 வரை தான் திறந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகனங்களில் எரிபொருள் நிரப்ப கூட்டம் அதிகமாக இருப்பதை காண முடிகிறது. கொரோனா பரவல் எதிரொலியாக அந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கையுறை அணிந்து தான் பணத்தை எண்ணுகின்றனர்.

மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனினும் அங்கு சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் கூட்டமாக வந்து வாகனங்களில் பெட்ரோல் நிரப்பியதை சர்ச்கார்னர், தாந்தோணிமலைமெயின்ரோடு உள்ளிட்ட இடங்களில் காண முடிகிறது. இதனால் கொரோனா தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டள்ளது. எனவே பெட்ரோல் விற்பனை நிலையங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story