சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு - தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கினார்


சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு - தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 5 April 2020 4:15 AM IST (Updated: 5 April 2020 1:08 AM IST)
t-max-icont-min-icon

சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகிய சமையல் பொருட்களை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வழங்கினார்.

குன்னத்தூர்,

குன்னத்தூர் அருகே சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகிய சமையல் பொருட்களை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.பழனிசாமி, சுண்டக்காம்பாளையம் ஊராட்சி தலைவர் ஆனந்த் என்ற எஸ். லோகநாதன், ரமேஷ், ஊராட்சி துணைத்தலைவர், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். மேலும் சுண்டக்காம்பாளையம், தாளப்பதி, தாத்திகாடு, பாலாஜிநகர், எம்.ஜி.ஆர். நகர், ஊமச்சிவலசு, பாலக்குளம் ஆகிய பகுதிகளில் கொரோனோ வைரஸ் தடுப்பு கிருமிநாசினி அடிக்கப்பட்டது.

ஊத்துக்குளி பேரூராட்சி பகுதியில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியை பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்புவெங்கடாசலம் தொடங்கிவைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப் குமார், பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ. பழனிச்சாமி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சிவக்குமார், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் சுப்பிரமணியம், குமார், மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், ஒன்றிய துணை செயலாளர் இ.எம்.ஆர் மூர்த்தி, பேரூர் செயலாளர் சின்னசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி சக்திவேல் தலைமையிலான போலீசார் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பிரதான சாலைகள், கடைவீதிகள், குடியிருப்பு பகுதிகளுக்கு கிருமிநாசினியை தீயணைப்பு வாகனம் மூலம் தெளிக்கப்பட்டது. மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான முககவசம், கையுறை மற்றும் பாதுகாப்பு கவசங்களை எம்.எல்.ஏ வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மல்லுச்சாமி, துணைத்தலைவர் மோகனசுந்தரம், உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்சி நிர்வாகிகள் சின்னசாமி, கோவி கருப்புசாமி கலந்துகொண்டனர்.

Next Story