பல்லடம் பஸ் நிலைய காய்கறி சந்தையில் கிருமி நாசினி சுரங்கப்பாதை
பல்லடம் பஸ் நிலைய காய்கறி சந்தையில் கிருமி நாசினி சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.
பல்லடம்,
பல்லடத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பல்லடம் பஸ் நிலையத்தில் காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. இந்நிலையில் காய்கறி வாங்க வரும் மக்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனை கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. ரூ.1 லட்சத்து 15ஆயிரம் நிதியில் அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.
இந்த கிருமிநாசினி சுரங்கப்பாதை 20 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ளது. 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியில் கிருமி நாசினி நிரப்பி ஸ்பிரேயர் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதில் நகராட்சி ஆணையாளர் கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சங்கர், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story