ஊரடங்கு உத்தரவை மீறியதாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 224 வழக்கு
ஊரடங்கு உத்தரவை மீறியதாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 224 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சீபுரம்,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி அனாவசியமாக சாலைகளில் சுற்றித்திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதாக நேற்று ஒரே நாளில் மட்டும் 224 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 300 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி தெரிவித்தார்.
அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் தடையை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 25 பேரை திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததுடன், அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தார்.
இதுபோல லத்தூர் ஒன்றியம் அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி பவுஞ்சூர் மற்றும் சுற்றுப்புறங்களில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தார்.
Related Tags :
Next Story