பரமக்குடி நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை மையம்
பரமக்குடி நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை மையம் தொடங்கப்பட்டது.
பரமக்குடி,
பரமக்குடி நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.100 அடக்க விலையில் காய்கறி தொகுப்பு விற்பனை செய்யும் நடமாடும் காய்கறி விற்பனை மையம் தொடக்க விழா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ. சதன் பிரபாகர் மையத்தை தொடங்கி வைத்தார்.
நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் முன்னிலை வகித்தார். சுகாதார அதிகாரி சண்முகவேல் வரவேற்றார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வின்சென்ட் ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக், பொட்டகவயல் தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைவர் தனபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story