கொரோனா விழிப்புணர்வு குறித்து எம்.ஜி.ஆர்.-கருணாநிதி வேடம் அணிந்து பிரசாரம் - துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்


கொரோனா விழிப்புணர்வு குறித்து எம்.ஜி.ஆர்.-கருணாநிதி வேடம் அணிந்து பிரசாரம் - துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்
x
தினத்தந்தி 5 April 2020 10:00 PM GMT (Updated: 6 April 2020 3:15 AM GMT)

கொரோனா விழிப்புணர்வு குறித்து தஞ்சையில் எம்.ஜி.ஆர்.- கருணாநிதி வேடம் அணிந்து பிரசாரம் செய்தனர். அப்போது பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

தஞ்சாவூர்,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதுகுறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி விழிப்புடன் இருக்குமாறு பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள், சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி, ஊராட்சி பணியாளர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சையில் நேற்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., கருணாநிதி வேடம் அணிந்த 2 பேர், கொரோனா விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களையும் வழங்கினர்.

எம்.ஜி.ஆர். வேடம் அணிந்தவர், பட்டுக்கோட்டையை சேர்ந்த குருசரன் ஆவார். டிரைவரான இவர், தஞ்சையில் தங்கி இருந்து எம்.ஜி.ஆரைப்போலவே பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கருணாநிதி வேடம் அணிந்தவர், தஞ்சையை சேர்ந்த காண்டிராக்டர் துரை. இவர்கள் இருவரின் விழிப்புணர்வு பிரசாரம், பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story
  • chat