மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு காங்கேயத்தில் இறைச்சி கடைகள் அடைப்பு


மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு காங்கேயத்தில் இறைச்சி கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 6 April 2020 10:15 PM GMT (Updated: 6 April 2020 6:57 PM GMT)

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு காங்கேயத்தில் இறைச்சி கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

காங்கேயம்,

காங்கேயத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் காய்கறி, மளிகை,மற்றும் இறைச்சி கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் கடைகளை திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இதனால் காலை நேரங்களில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்து வந்தது. சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய போதிலும் பெரும்பாலான கடைகளில் இதை கடைபிடிக்காமல் நின்றனர்.

இந்நிலையில் நேற்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு காங்கேயம் தினசரி மார்க்கெட்டில் உள்ள இறைச்சி மற்றும் கோழி கடைகள் மற்றும் நகரப்பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள இறைச்சி கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

Next Story