கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்குவதை கலெக்டர் ஆய்வு


கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்குவதை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 April 2020 3:45 AM IST (Updated: 7 April 2020 1:25 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்குவதை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் வசந்தம் நகர், இருளர் காலனியில் வசிக்கும் இருளர் இன மக்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, திருவள்ளூர் மாவட்ட இருளர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story