கொரோனா விஷயத்தில் யாரும் அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி


கொரோனா விஷயத்தில் யாரும் அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை - காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 7 April 2020 5:55 AM IST (Updated: 7 April 2020 5:55 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா விஷயத்தில் யாரும் அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் சார்பில் கிருஷ்ண பைரேகவுடா எம்.எல்.ஏ. தலைமையில் ஒரு போர் அலுவலகத்தை அமைத்துள்ளோம்.

மேலும் முன்னாள் சுகாதாரத்துறை மந்திரிகள், மருத்துவ கல்வி மந்திரிகள் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளோம். அதில் எங்கள் கட்சியை சேர்ந்த டாக்டர்கள் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்கள் ஆலோசனை வழங்குவார்கள். அந்த ஆலோசனைகள் அரசுக்கு தெரிவிக்கப்படும்.

மனித குலத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும். சிலர் அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள். இதை தவிர்க்க வேண்டும். இத்தகைய ஆபத்தான நேரத்தில் யாரும் அரசியல் செய்வதில் அர்த்தம் இல்லை.

முதல்-மந்திரி எடியூரப்பா அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். அதில் நாங்கள் பங்கேற்று சில ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர்களிடம் பேசியுள்ளார். அனைத்துக்கட்சி கூட்டத்தையும் கூட்டியுள்ளார். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவ பணியாளர்கள், போலீசாருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.”

இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.

Next Story