கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கருவி மூலம் உடல் வெப்ப நிலையை கண்டறிந்து வருகின்றனர்.
பெரம்பலூர்,
கொரோனா வைரசை தடுக்கும் நடவடிக்கையாக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு கைகளை சுத்தம் செய்ய நகராட்சி சார்பில் கிருமி நாசினி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே சோப்பு, கிருமி நாசினி ஆகியவற்றை பயன்படுத்தி கைகளை கழுவ தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சுகாதார பணியாளர்கள், உடல் வெப்ப பரிசோதனை கருவி மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்களின் உடல் வெப்ப நிலையை கண்டறிந்து வருகின்றனர். உடலில் அதிக வெப்பநிலை இருந்தால் டாக்டரை அணுகுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story