சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு
சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் யாராவது சிகிச்சைக்கு வந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 4 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனி வார்டை பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, தாளவாடி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க பவானிசாகர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தை ஒதுக்குவதாக அறிவித்தார். ஆய்வின் போது சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட பலர் இருந்தனர்.
Related Tags :
Next Story