600 குடும்பத்தினருக்கு இலவச அரிசி - ஆலாம்பாடி ஊராட்சி தலைவர் வழங்கினார்


600 குடும்பத்தினருக்கு இலவச அரிசி - ஆலாம்பாடி ஊராட்சி தலைவர் வழங்கினார்
x
தினத்தந்தி 7 April 2020 9:45 PM GMT (Updated: 7 April 2020 8:13 PM GMT)

ஆலாம்பாடி ஊராட்சி தலைவர் ஆர்.ராஜாமணி ராயல் ரங்கசாமி, ஊராட்சியில் உள்ள ஏழை கூலி தொழிலாளர்கள் 600 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கினார்.

காங்கேயம்,

காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலாம்பாடி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊராட்சி தலைவர் ஆர்.ராஜாமணி ராயல் ரங்கசாமி தலைமையில் வீதிகள் தோறும் தூய்மை பணியாளர்களால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. 

அதை தொடர்ந்து ஒவ்வொரு வீட்டுற்கும் சென்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து ஊராட்சியில் உள்ள ஏழை கூலி தொழிலாளர்கள் 600 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்கினார்.

மேலும் ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று குடிநீர் வினியோகம் மற்றும் குடிநீர் மேல்நிலைதொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா? எனவும் ஆய்வு செய்தார்.ஊராட்சி தலைவருடன் முன்னாள் தலைவர் ராயல் ரங்கசாமியும் உடனிருந்தார்.

Next Story