மாநகரில் 210 எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

x
தினத்தந்தி 7 April 2020 10:45 PM GMT (Updated: 8 April 2020 3:12 AM GMT)

திருச்சி மாநகரில் 210 எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி,

கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கும் படியும் அத்தியாவசிய தேவைக்காக வெளியே வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணியாமல் வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரம் மற்றும் புறநகர் பகுதி என கொரோனா தொற்று இதுவரை 30 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, திருச்சி மாநகரில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்களுடன் பல தன்னார்வ அமைப்பினரும் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்காக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் 210 கிருமி நாசினி தெளிப்பு எந்திரங்கள் வாங்கப்பட்டு 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 குதிரைத்திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தி அவை மாநகராட்சியின் 4 கோட்டங்களுக்குட்பட்ட பகுதியில் கிருமி நாசினி தெளிக்க பயன்படுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார். தொடர்ந்து அவர், கிருமி நாசினி தெளிக்கும் பணியினை தொடங்கிவைத்தார்.

ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம் மற்றும் பொன்மலை கோட்ட தூய்மை பணியாளர்களிடம் கிருமி நாசினி எந்திரங்கள் வழங்கப்பட்டு வீடுகள், காய்கறி சந்தைகள் மற்றும் பொது இடங்களில் தெளிக்கப்பட்டன. 200 மினி ஸ்பிரேயர், கைத்தெளிப்பான்கள், பேட்டரி மூலம் இயங்கும் எந்திரம், பவர் ஸ்பிரேயர், 2 ஸ்டோக் என்ஜின், 4 ஸ்டோக் என்ஜின் மற்றும் 10 பெரிய வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. கிருமி நாசினி தெளிக்கும் பணியினை சுகாதார அலுவலர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் தினமும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.
மாநகரில் 210 எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

திருச்சி,திருச்சி மாநகரில் 210 எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Next Story