கொரோனா நிவாரண உதவிக்கு கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் - அதிகாரி தகவல்
கொரோனா நிவாரண உதவிக்கு கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர்,
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில் கட்டுமானம் மற்றும் ஓட்டுநர் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.1,000 நிவாரண உதவித்தொகை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டபேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
எனவே கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் பதிவு பெற்றுள்ள கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் கொரோனா நிவாரண உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
அதற்காக cudlosss@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொழிலாளர்கள் தங்களது அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாளர் அட்டை நகல்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story