போலீசுக்கு பயந்து ஓடியபோது கல்குவாரி குட்டையில் விழுந்த வாலிபர் பலி

மூவரசம்பேட்டையில் போலீசுக்கு பயந்து ஓடியபோது கல்குவாரி குட்டையில் விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த ஆலந்தூர் ஜின்னா தெருவை சேர்ந்தவர் ரிஸ்வான் (வயது 24). இவரது நண்பர்களான ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்த டேவிட் (24), விமல்ராஜ் (23), சந்தோஷ் (24) உள்பட 5 பேரும் மூவசரம்பட்டு கல்குவாரி குட்டை அருகே மதுபோதையில் இருந்தனர்.
அப்போது ரிஸ்வான், டேவிட் ஆகியோரிடம் பணம் குறித்த தகராறில் விமல்ராஜ், சந்தோஷ் ஆகியோர் ஈடுபட்டனர். இதை கண்ட அந்த பகுதியினர் பழவந்தாங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே போலீசார் வருவதை கண்டதும் அனைவரும் ஓடினார்கள். அப்போது ரிஸ்வான் எதிர்பாராதவிதமாக கல்குவாரி குட்டையில் விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.
மேலும் அவரை தேடி பார்த்தபோது கிடைக்கவில்லை. பின்னர் கிண்டி தீயணைப்பு வீரர்கள் வந்து போராடி ரிஸ்வான் உடலை மீட்டனர். இதுபற்றி பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகராறில் டேவிட்டிடம் செல்போனை பறித்ததாக அம்பேத்கார் நகரை சேர்ந்த விமல்ராஜ், சந்தோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story