ஊத்தங்கரை பேரூராட்சியில், தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் கையுறைகளை மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.


ஊத்தங்கரை பேரூராட்சியில், தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் மற்றும் கையுறைகளை மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.
x
தினத்தந்தி 10 April 2020 4:00 AM IST (Updated: 10 April 2020 9:28 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம் - மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்

ஊத்தங்கரை,

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு முக கவசம் மற்றும் கையுறைகளை மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்.

மேலும் ஊத்தங்கரை பஸ் நிலையம், சந்தைபேட்டை, காமராஜர் நகர், கல்லாவி சாலை, முனியப்பன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, நகர செயலாளர் சிவானந்தம், முன்னாள் மாநில நிலவள வங்கி தலைவர் சாகுல் அமீது, முன்னாள் பேரூராட்சி உறுப்பினர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story