இலவச அரிசி வழங்குவது தாமதம்


இலவச அரிசி வழங்குவது தாமதம்
x
தினத்தந்தி 11 April 2020 1:43 PM IST (Updated: 11 April 2020 1:43 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சள் நிற ரேஷன் கார்டு தாரர்களுக்கும் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் புதுவையில் இலவச அரிசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி,

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் ஏழைகள் வருமானமின்றி தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். அவர்களது துயரத்தைப் போக்கும் வகையில் சிவப்புநிற ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்கள் ஒவ்வொருவருக்கும் மாதம் ஒன்றுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் கார்டு ஒன்றுக்கு ஒரு கிலோ பருப்பு ஆகியவற்றை வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது. நிவாரண உதவியாக 3 மாதங்களுக்குரிய பொருட்களை ஒரே தவணையில் வழங்க திட்டமிடப்பட்டது.

அதன்படி புதுவையில் 1.78 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு நேற்று முதல் இலவச பொருட்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக அதிகாரிகள் அடங்கிய 50 குழுக்கள் தயார் நிலையில் இருந்தன.

இந்தநிலையில் இலவச பொருட்கள் வினியோகம் தொடர்பாக எம்.எல்.ஏ.க்களுடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு தரப்பினருக்கு மட்டும் நிவாரண உதவிகள் வழங்குவது என்பது பிரச்சினையை ஏற்படுத்தும். இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கூட ஏற்படலாம் என்று எம்.எல்.ஏ.க்கள் எச்சரித்தனர்.

மேலும் மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஏனெனில் வறுமையில் வாடும் பலருக்கும் தவறுதலாக மஞ்சள் நிற ரேஷன் கார்டு வழங்கப்பட்டிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே அனைத்து தரப்பினருக்கும் நிவாரண பொருட் கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மஞ்சள் நிற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்க அரசு சார்பில் கோப்புகள் தயாராகி வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச பொருட்கள் வழங்க ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக நிவாரண பொருட்கள் வழங் கப்படும் என்று தெரிகிறது. இதனால் சிவப்புநிற ரேஷன் கார்டுகளுக்கு நேற்று வழங்கப்படுவதாக இருந்த இலவச பொருட்கள் வழங்கப்படவில்லை.

Next Story