பாரூர் அருகே, குட்டையில் தவறி விழுந்து அக்காள்-தம்பி பலி
பாரூர் அருகே குட்டையில் தவறி விழுந்து, அக்காள், தம்பி பலியானார்கள்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வாடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 38). இவரது மனைவி தவமணி (32). இவர்களுக்கு இளவரசி (7), இசைப்பிரியா (1) என்ற 2 மகள்களும், சிவகார்த்திகேயன் (5) என்ற மகனும் இருந்தனர். தவமணி தன் குழந்தை களுடன், பாரூர் அருகே உள்ள அரசம்பட்டியில் நரேஷ் (40) என்பவரின் தென்னந்தோப்பில் தங்கியிருந்து, கடந்த 6 மாதமாக காவல் பணியில் ஈடுபட்டு வந்தார்.
சிறுமி இளவரசி அரசம் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு தவமணி தென்னந்தோப்பில் காவல் பணியில் ஈடுபட்டு இருந் தார். இதனால் இளவரசி, தனது தம்பி சிவகார்த்தி கேயனுடன் அதேபகுதியில் இருந்த முருகன் என்பவரது விவசாய கிணற்றின் அருகே தென்னம் மட்டை களை ஊற வைப்பதற்கு அமைக்கப்பட்டு இருந்த குட்டை அருகே சென் றாள்.
அப்போது அக்காள், தம்பி 2 பேரும் எதிர்பாராத விதமாக தவறி குட்டையில் விழுந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு தவமணி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்பக் கத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர் கள் குட்டையில் இருந்து குழந்தைகளை மீட்டு, பாரூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர். அங்கு, குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர், 2 பேரும் ஏற் கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். குட்டையில் தவறி விழுந்து அக்காள்- தம்பி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story