தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்


தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 13 April 2020 3:30 AM IST (Updated: 13 April 2020 12:53 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மார்க்கெட்டில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடித்து காய்கறிகள் வாங்கி சென்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுப்பதற்காக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தூத்துக்குடியில் நேற்று வழக்கம் போல் காய்கறி மார்க்கெட் மற்றும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகள் திறந்து இருந்தன. அங்கு வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து காய்கறிகளை வாங்கி சென்றனர். நேற்று ஈஸ்டர் பண்டிகை என்பதால் பெரும்பாலான இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பொது இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோன்று தனிமைப்படுத்தப்பட்டு உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. தீயணைப்பு வாகனங்கள், டேங்கர் லாரிகள் மூலம் இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story