பறிக்கப்படாததால் செடியில் வாடி வீணாகும் அரளி-கோழிக்கொண்டை பூக்கள்


பறிக்கப்படாததால் செடியில் வாடி வீணாகும் அரளி-கோழிக்கொண்டை பூக்கள்
x
தினத்தந்தி 14 April 2020 3:45 AM IST (Updated: 14 April 2020 2:45 AM IST)
t-max-icont-min-icon

அரளி, கோழிக்கொண்டை பூக்கள் செடியில் பூத்து அப்படியே வாடி வீணாகி கீழே விழுந்து விடுவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

பவானிசாகர், 

சத்தியமங்கலம், பவானிசாகர், கோடேபாளையம், எரங்காட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் மல்லிகைப்பூ, முல்லை, சம்பங்கி, அரளி, செண்டுமல்லி, கோழிக்கொண்டை உள்பட பல்வேறு மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து உள்ளனர். இங்கு பறிக்கப்படும் மலர்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு ஏலம் விடப்படும். 

கொரோனா ஊரடங்கு காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட் பூட்டப்பட்டது. இதனால் மலர்களை விவசாயிகள் பறித்து சென்று விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதில் மல்லிகை தோட்டத்தில் விவசாயிகள் பலர் தங்களுடைய கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டனர். அரளி, கோழிக்கொண்டை பூக்கள் செடியில் பூத்து அப்படியே வாடி வீணாகி கீழே விழுந்து விடுவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

Next Story