சாராயம் காய்ச்சியவர் கைது


சாராயம் காய்ச்சியவர் கைது
x
தினத்தந்தி 14 April 2020 3:45 AM IST (Updated: 14 April 2020 3:12 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்,

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் பரிதவிக்கும் மதுபிரியர்கள், சில இடங்களில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து மதுபானங்களை திருடிச் செல்கிறார்கள்.

இந்தநிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும்போதும் திருநீர்மலை பகுதியில் அடையாறு ஆற்றங்கரை பகுதியில் மதுபிரியர்கள் நடமாட்டம் தொடர்வதாக மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராம் மற்றும் போலீசார் திருநீர்மலை பகுதியில் கல்குவாரிகளை ஒட்டிய அடையாறு ஆற்றங்கரையோரம் சோதனை செய்தனர்.

அப்போது 150 லிட்டர் சாராயம் காய்ச்ச போடப்பட்டிருந்த ஊறல்களை கைப்பற்றினர். மேலும் ஊறல்கள் போடப்பட்ட பேரல்கள், பானைகளை போலீசார் அடித்து நொறுக்கினர். இதையடுத்து சாராயம் காய்ச்சிய திருநீர்மலையை சேர்ந்த பூரி என்ற வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.

Next Story