பட்டணம்காத்தான் ஊராட்சியில் ஓவியத்தில் கொரோனா விழிப்புணர்வு


பட்டணம்காத்தான் ஊராட்சியில் ஓவியத்தில் கொரோனா விழிப்புணர்வு
x
தினத்தந்தி 14 April 2020 4:15 AM IST (Updated: 14 April 2020 4:04 AM IST)
t-max-icont-min-icon

பட்டணம்காத்தான் ஊராட்சியில் தமிழ்நாடு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஓவியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஓவியம் வரைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சாலைகள், பொதுமக்கள் வசிக்கும் பகுதி, காய்கறி மார்க்கெட்டு போன்ற பல்வேறு இடங்களில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சுகாதாரத்துறையினர் மூலம் நோட்டீசுகளும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மா பூங்கா அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டு செல்லும் வழியில் தமிழ்நாடு மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஓவியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஓவியம் வரைந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனை பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ரா மருது மேற்பார்வையில், யூனியன் ஆணையாளர் சேவுகப்பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ராமநாதபுரம் தாலுகா வீட்டு வசதி சங்க தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான மருதுபாண்டியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஓவியர் சங்க நிர்வாகிகள், ஊராட்சி துணை தலைவர் வினோத், ஊராட்சி செயலர் நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story