கொரோனா பாதித்த போலீஸ் அதிகாரியுடன் தொடர்பில் இருந்த மந்திரி ஜிதேந்திர அவாத் தனிமைபடுத்தி கொண்டார்
போலீஸ் அதிகாரிக்கு கொரோனா பாதித்ததன் எதிரொலியாக அவருடன் தொடர்பு இருந்த மந்திரி ஜிதேந்திர அவாத் முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைபடுத்திக் கொண்டார்.
மும்பை,
மும்பையை போல தானேயிலும் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கல்வா, மும்ரா பகுதியில் பலர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தநிலையில், தானேயில் பணிபுரியும் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அவருடன் மாநில வீட்டு வசதித்துறை மந்திரியும், கல்வா-மும்ரா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜிதேந்திர அவாத் தொடர்பில் இருந்து உள்ளார்.
தனிமைபடுத்திக் கொண்டார்
தான் தொடர்பில் இருந்த போலீஸ் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மந்திரி ஜிதேந்திர அவாத் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்திக் கொண்ட முதல் மராட்டிய மந்திரி ஜிதேந்திர அவாத் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அவர் அண்மையில் தனது தொகுதி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story