அரியலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களுக்கு பச்சை வர்ணம் பூசிய போலீசார்


அரியலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களுக்கு பச்சை வர்ணம் பூசிய போலீசார்
x
தினத்தந்தி 14 April 2020 3:30 AM IST (Updated: 14 April 2020 8:13 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் நேற்று சாலைகளில் வந்த இருசக்கர வாகனங்களுக்கு பச்சை வர்ணத்தை போலீசார் பூசினர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கு ஒவ்வொரு வண்ணம் என 3 வண்ணங்களில் இந்த அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பச்சை வண்ண அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வர அனுமதி உண்டு.

ஆனால் அதை மீறி தேவையின்றி வெளியே வருபவர்களை அடையாளம் காணவும், குறிப்பிட்ட நாட்களை தவிர மற்ற நாட்களில் பொருட்கள் வாங்க வருபவர்களை அடையாளம் காணும் வகையிலும் நேற்று அரியலூர் பகுதியில் போலீசார் வாகனங்களை நிறுத்தி, அந்த வாகனங்களுக்கு பச்சை வர்ணம் பூசினர். அடையாள அட்டை இல்லாமல் வந்தவர்களை எச்சரித்தனர்.

இதேபோல் ஜெயங்கொண்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், ரமேஷ் பாபு உள்ளிட்ட போலீசார் நேற்று இருசக்கர வாகனங்களுக்கு பச்சை வர்ணம் பூசி அனுப்பினர்.

வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் கயர்லாபாத், விக்கிரமங்லம் போலீசார், இருசக்கர வாகனங்களுக்கு பச்சை வர்ணம் பூசினர். மேலும் அந்த வாகனங்கள் நாளை(அதாவது இன்று) சாலையில் வந்தால் பறிமுதல் செய்யப்படுவதோடு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர்.

Next Story