திருவாரூர் மாவட்டத்தில், 21 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு - மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு


திருவாரூர் மாவட்டத்தில், 21 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு - மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 16 April 2020 1:19 PM IST (Updated: 16 April 2020 1:19 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 21 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு் மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

திருவாரூர், 

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து இதுவரையில் 1,204 பேர் என்ற நிலையை எட்்டியுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீடாமங்கலம் கோவில்வெண்ணி, பொதக்குடி, தி்ருத்துறைப்பூண்டி, அத்திக்கடை, கோட்டூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி, கூத்தாநல்லூர் மற்றும் திருவாரூர் உள்பட 20 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பகுதி நுழைவு பகுதியில் தடை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி நபர்கள் யாரும் உள்ளே வர அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு் மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூரில் வண்டிக்கார தெரு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மற்றொரு பகுதியாக ஐந்நூற்று பி்ள்ளையார் கோவில் வடக்கு தெருவை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்்பட்டு டவுன் போலீசார் அறிவிப்பு செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 21 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story