கர்நாடகத்தில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 302 ஆக உயர்வு


கர்நாடகத்தில் ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா பாதிப்பு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 302 ஆக உயர்வு
x
தினத்தந்தி 17 April 2020 5:52 AM IST (Updated: 17 April 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த முதியவர் ஒருவர் நேற்று மரணம் அடைந்தார்.

பெங்களூரு,

சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் பரவி தினமும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி பலி கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தபோதிலும் தினமும் கொரோனா வைரசுக்கு பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்த நிலையில் நேற்று முன்தினம் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆனால் நேற்று திடீரென்று ஒரே நாளில் கொரோனா தொற்று 36 பேருக்கு ஏற்பட்டு இருப்பது ெதரிய வந்து உள்ளது.

இது குறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 267 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். 12 பேர் மரணம் அடைந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் கொரோனாவுக்கு புதிதாக நேற்று ஒரே நாளில் மேலும் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 66 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 82 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். புதிதாக கொரோனா பாதித்தவர்களின் விவரம் வருமாறு:-

பெலகாவியில் 17 பேர் பாதிப்பு

பெங்களூருவை சேர்ந்த 13 வயது சிறுவன், 65 வயது மூதாட்டி, 37 வயது இளைஞர், 43 வயது நபர், 54 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 43 வயது நபருக்கு எப்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மற்ற 4 பேரும் ஏற்கனவே வைரஸ் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த 51 வயது பெண், 42 வயது நபர், 33 வயது இளைஞர், 16 வயது சிறுமி, 65 வயது மூதாட்டி, 30 வயது பெண், 54 வயது நபர், 58 வயது பெண், 47 வயது நபர், 25 வயது இளைஞர், 45 வயது பெண், 30 வயது இளைஞர், 43 வயது நபர், 50 வயது நபர், 35 வயது இளைஞர், 25 வயது இளைஞர், 64 வயது மூதாட்டி ஆகிய 17 பேருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

18 மாத குழந்தை

கலபுரகியை சேர்ந்த 23 வயது பெண், 32 வயது பெண், 5 வயது சிறுவனுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மைசூரு மாவட்டத்தை சேர்ந்த 52 வயது நபர், 38 வயது பெண், 26 வயது பெண் ஆகிய 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கதக்கை சேர்ந்த 59 வயது மூதாட்டிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுவன், 65 வயது, 66 வயது முதியவர்கள், 37 வயது இளைஞர், 70 வயது மூதாட்டி, 18 மாத பெண் குழந்தை, 55 வயது பெண் ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 36 பேரும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 74 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

152 பேருக்கு அறிகுறி

இதில் நேற்று மட்டும் 1,169 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். கர்நாடகத்தில் நேற்று 152 பேர் கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் சுகாதாரத்துறையின் உதவி மையத்தை தாமாக முன்வந்து தொடர்புகொள்ள வேண்டும்.

ரம்ஜான் நோன்பு விரதம் இருக்கும் முஸ்லிம் மக்கள், ஊரடங்கு உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் அதிகரிப்பு

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக நேற்று அதிகபட்ச அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா ஓரளவுக்கு கட்டுக்குள் இருப்பதாகவே கருதப்பட்டு வந்தது. ஒரே நாளில் 36 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளும் இதை சற்று அதிர்ச்சியுடன் தான் பார்க்கிறார்கள்.

Next Story