தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம் - மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைந்தது
தூத்துக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், மாவட்டத்தில் 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தூத்துக்குடி மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இடம்பிடித்து உள்ளது.
இதையடுத்து கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலான முக்கிய சாலைகளின் குறுக்கே போலீசார் கயிறுகளை கட்டியும், தடுப்புகளை அமைத்தும் அடைத்து வைத்து உள்ளனர். இதனால் கடைகள் திறந்து இருந்தும், பொருட்கள் வாங்க வாகனங்களில் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.
சாலைகள் வெறிச்சோடின
தூத்துக்குடியில் பெரும்பாலான முக்கிய சாலைகள் முடக்கப்பட்டு இருப்பதால், மக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் மற்றும் தற்காலிக மார்க்கெட்டுகளில் நேற்று மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. அனைத்து பரிசோதனை முடிவுகளும் வைரஸ் பாதிப்பு இல்லை என்றே வந்து உள்ளது. இதனால் அதிகாரி கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story