கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் மேலும் 4 பேர் அனுமதி
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் மேலும் 4 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனியாக வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.
அங்கு கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 4 பேர் அனுமதி
இந்த நிலையில் கோவில்பட்டி மில் தெருவைச் சேர்ந்த 24 வயதான வாலிபரும், முகமதுசாலிஹாபுரத்தைச் சேர்ந்த 39 வயதான ஆண் ஒருவரும், மேலப்பட்டியைச் சேர்ந்த 63 வயதான முதியவரும், கயத்தாறைச் சேர்ந்த 65 வயதான மூதாட்டியும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் நேற்று கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களது ரத்த மாதிரிகளை சேகரித்து, ஆய்வக பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதன்மூலம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story