அம்மா உணவகத்தில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்வு - நகராட்சி ஆணையாளர் தகவல்


அம்மா உணவகத்தில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்வு - நகராட்சி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 18 April 2020 4:06 AM IST (Updated: 18 April 2020 4:06 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி அம்மா உணவகத்தில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது என்று நகராட்சி ஆணையாளர் வீர முத்துக்குமார் கூறினார்.

பரமக்குடி, 

இது குறித்து அவர் கூறியதாவது:- கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து பரமக்குடியில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆதரவற்றவர்களுக்கு பரமக்குடி ஆயிர வைசிய மேல் நிலைப் பள்ளியில் நகராட்சியின் சார்பில் 3 வேளையும் இலவச உணவு வழங்கப்படுகிறது.

மேலும் அங்கு தங்கி இருப்பவர்களுக்கு பாய், தலையணை மற்றும் குளிப்பதற்கு தேவையான பொருட்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் பரமக்குடி பஸ் நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மிக குறைந்த விலையில் காலை, மதியம், இரவு வேளையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அம்மா உணவகத்தில் தினமும் சராசரியாக 700 பேர் உணவு சாப்பிட்டு வந்துள்ளனர்.

அது தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக பார்சல் வாங்கி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு சாப்பிட வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து உணவுகளை வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

Next Story