தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா உறுதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு


தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா உறுதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
x
தினத்தந்தி 18 April 2020 4:15 AM IST (Updated: 18 April 2020 4:08 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில், 17 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில், 17 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.

கொரோனா வைரஸ்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம்(மே) 3-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் ளது.

மேலும் மக்கள் அத்தியா வசிய தேவைக்காக காய்கறி, மளிகை, மருந்து வாங்குவதற் காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படு கின்றனர். இதற்காக 3 வண்ணங்களில் அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள் ளது. அதையும் மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்கள் வந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

18 பேருக்கு சிகிச்சை

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், மாவட்டத்திலேயே முதன் முதலில் பாதிக்கப்பட்ட கும்பகோணத்தை சேர்ந்த சமையல் தொழிலாளி குணம் அடைந்ததால் நேற்று முன்தினம் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மற்றவர்களில் 9 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற வர்கள். மீதம் உள்ள 9 பேர் அவர்களை சந்தித் தவர்கள் மற்றும் உறவினர்கள் ஆவர். இதனிடையே, கொரோனா வால் பாதிக்கப் பட்டவர்களு டன் தொடர்பில் இருந்த உறவினர்களையும், சந்தித்தவர் களையும் மாவட்ட நிர்வாகம் கடந்த மாத இறுதிக்குள் கண்டறிந்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரி வளாகத்திலும் அமைக்கப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு சிறப்பு மையத்திலும் தனிமைப்படுத்தி யது.

ஒரே நாளில் 17 பேருக்கு உறுதி

இவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களில் 173 பேருக்கு தொற்று இல்லை என்பது சில நாட்களுக்கு முன்பு தெரிய வந்ததையடுத்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், வல்லம், திருவை யாறு, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 14 பேர் கடந்த 1-ந் தேதி தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு முதல் கட்ட பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், இவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. என்றாலும் இவர்கள் செங்கிப் பட்டி பொறியியல் கல்லூரியில் உள்ள கொரோனா தடுப்பு சிறப்பு மையத்தில் தனிமைப் படுத்தப்பட்டு தொடர் மருத்துவக்கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இவர் களுக்கு 2-ம் கட்ட பரிசோதனை செய்யப்பட்ட தில் கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப் பட்டது. இதேபோல் வல்லம் மற்றும் கும்பகோணத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டு கண்காணிக்கப்பட்ட மேலும் 3 பேருக்கும் என நேற்று ஒரே நாளில் மட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

35 ஆக உயர்வு

இதையடுத்து இவர்கள் 17 பேரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சை மாவட்டத் தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், “ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு, அவர் கள் செங்கிப்பட்டி பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். அவர்களில் 47 பேரில் 33 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. மீதமுள்ள 14 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப் பட்ட 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது.

அச்சப்பட தேவை இல்லை

நாம் தனிமைப்படுத்தப்பட்டு வைத்திருந்ததன் காரணமாக இத்தொற்று மற்றவர்களுக்குப் பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. எனவே 17 பேருக்கு தொற்று இருப்பதால் அச்சப்பட தேவையில்லை. அவர்களை தனிமைப்படுத்தியதால் சமூகத்தொற்று தடுக்கப் பட்டுள்ளது. இந்த விவ காரத்தை மாவட்ட நிர்வாக மும், மருத்துவக்கல்லூரியும் தொலைநோக்கு பார்வை யுடன் கையாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது” என்றனர்.

4 பேர் சாவு

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் வயதான 2 பெண்களும், ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற சீர்காழியை சேர்ந்த பெண்ணும், அந்த குழந்தையும் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தனர்.

ஆனால் இறந்த 3 பெண்களுக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்றும், இருதய கோளாறு உள்ளிட்ட காரணங்களால் இறந்ததாக வும் டாக்டர்கள் தெரிவித்தனர்.


Next Story