ஏழைகள் பசியால் வாடாமல் இருக்க சீரான உணவு பொருட்கள் வினியோகம் - மந்திரிகளுக்கு, அஜித் பவார் வேண்டுகோள்


ஏழைகள் பசியால் வாடாமல் இருக்க சீரான உணவு பொருட்கள் வினியோகம் - மந்திரிகளுக்கு, அஜித் பவார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 18 April 2020 5:01 AM IST (Updated: 18 April 2020 5:01 AM IST)
t-max-icont-min-icon

ஏழைகள் பசியால் வாடாமல் இருக்க சீரான உணவு பொருட்கள் வினியோகிக்க மந்திரிகளுக்கு துணை முதல்-மந்திரி அஜித் பவார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை, 

மாவட்ட பொறுப்பு மந்திரிகளுக்கு துணை முதல்-மந்திரி அஜித்பவார் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் ஏழைகளுக்கு போதுமான உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. மாநில உணவு மற்றும் வினியோகத்துறை மூலம் கோதுமை மற்றும் அரிசியை முறையே கிலோவுக்கு ரூ.2 மற்றும் ரூ.3 என்ற வீதத்தில் 3 மாதங்களுக்கு 7 கோடி மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கி வருகிறது.

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு அறிவித்த 5 கிலோ இலவச அரிசியும் வழங்கப்படுகிறது. மேலும் தேவைப்படும் ஏழைகளுக்கு கோதுமை கிலோ ரூ.8-க்கும், அரிசி கிலோ ரூ.12-க்கும் வினியோகம் செய்யப்படும்.

முறைகேடுஇருக்க கூடாது

யாரும் பசியுடன் இருந்து விடாமல் இருப்பதற்காக நெறிபடுத்தப்பட்ட முறையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான முறைகேடும் இருக்க கூடாது. இதுதொடர்பாக ஏதேனும் புகார் வந்தால் உடனடியாக அதை சரி செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட பொறுப்பு மந்திரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story