மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யக்கோரி விவசாயிகள் மனு
மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதினை சரி செய்யக்கோரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
பெரம்பலூர்,
மின்மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதினை சரி செய்யக்கோரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.
மனு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா ஜமீன் பேரையூர் அருகே உள்ள புஜயங்கராயநல்லூரை சேர்ந்த விவசாயிகளில் சிலர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் அருகே உள்ள ஜமீன் பேரையூரில் விவசாய மின் இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதற்கு உள்ள மின்மாற்றி கடந்த 1 மாதத்திற்கு முன்பு பழுது ஏற்பட்டது.
அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், ஜமீன் பேரையூரில் வீட்டு மின் இணைப்புகளுக்கும், விவசாய மின் இணைப்புகளுக்கும் மின்சாரம் வழங்குவதற்கு 2 மின்மாற்றிகள் உள்ளன. இதில் விவசாயத்திற்கான மின்மாற்றி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பழுதானதால், வீட்டு இணைப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் மின்மாற்றியில் இருந்து தற்போது விவசாய மின் இணைப்புகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அதில் இருந்து போதிய அளவு வீடுகளுக்கும், விவசாயத்திற்கும் மின்சாரம் கிடைப்பதில்லை.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்நிலையில் அந்த மின்மாற்றியும் பழுதாகும் நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்திற்கு புகார் தெரிவித்தும், அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுத்தப்பாடில்லை. மேலும் போதிய அளவு மின்சாரம் இல்லாததால் தற்போது விளைநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, தோட்டப்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விவசாயத்திற்கான மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளன. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் விவசாய மின்மாற்றிகளில் ஏற்பட்டுள்ள பழுதினை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story